மூன்று தமிழர் தூக்குக் கயிறை அறுத்திட தன் உயிரைக் கொடுத்த போராளி தோழர் செங்கொடிக்கு ஒன்பதாம் ஆண்டு வீரவணக்கம்- மே பதினேழு இயக்கம்.
பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட மூன்று நிரபராதி தமிழர்களின் துக்கு கயிறை அறுக்க 28.08.2011ஆம் ஆண்டு தன் உடலையே போராட்ட வடிவமாக்கியவர் தோழர் செங்கோடி. அவரின் ஈகமே அன்று தமிழர்களை மூன்று தமிழர்களின் தூக்கு கயிறை அறுக்க ஓர் அணியில் திரள வைத்தது. அதோடு அதுவரை நிரபராதி தமிழர்களின் விசயத்தில் முன்னுக்கு பின் முரனாக பேசிவந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சட்டபேரவையை கூட்டி சாதகமான முடிவை எடுக்க வைத்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் மத்தியில் மரணதண்டனை ஒழிப்பு என்ற கருத்துருவாக்கம் வலுத்ததும் இதன்பின் தான்.
இப்படிப்பட்ட ஈகத்திற்கு பின்னாலும் இன்னும் மூன்று நிரபராதி தமிழர்களும் சிறைக்கொட்டடியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இருப்பது அவலமே. ஆகவே தோழர் செங்கொடியின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாளான இன்று ஏழு நிரபராதி தமிழர்களையும் சிறையிலிருந்து மீட்க வேண்டுமென்ற உறுதிபாட்டை நாம் எடுத்துக் கொள்வோம்.
தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்
மே17 இயக்கம்
9884072010