அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு

அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு

முகநூல் இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. தற்போது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை 14.08.2020 அன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அங்கி தாஸ், தான் சார்ந்த முகநூல் கொள்கைக்கு எதிராக இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் வெறுப்பு பிரசாரங்களை முகநூலில் பரவ அனுமதித்துள்ளார் என்று அம்பலப்படுத்தியுள்ளது.

அங்கி தாஸின் சகோதரி ரேஸ்மி தாஸ் (Rashmi Das), RSS-ன் மாணவர் அமைப்பான ABVP-வின் டில்லி JNU தலைவராக இருந்தவர். இவர் JNU-வில் ABVP நிகழ்த்திய தாக்குதலை நியாயப்படுத்தி பேசியவர். பின்னர், பேஸ்புக்-ரிலையன்ஸ் ஜியோ இடையேயான ஒப்பந்தம் இந்தியாவின் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார்.

முகநூல் தலைவர் அங்கி தாஸ் WOSY எனப்படும் மாணவர்களுக்கான அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இந்த WOSY அமைப்பின் தலைவராக அங்கி தாஸின் சகோதரி ரேஸ்மி தாஸ் உள்ளார். ABVPயின் கலை அமைப்பான ராஷ்ட்ரீய கலா மன்ச் செயல்படும் அதே முகவரியில் தான் இந்த WOSY அமைப்பும் செயல்படுகிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஒட்டுமொத்த ஊடகங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு ஒரு தலைப்பட்சமான செய்திகளை மட்டுமே மக்களிடம் கொண்டு செல்வது அப்பட்டமாக தெரிந்திருக்கும் வேளையில், சமூக வலைத்தளங்கள் மட்டுமே கருத்தை சுதந்திரமாக வெளியிடும் ஊடகமாக கருதப்பட்டால், தற்போது முகநூல் இந்திய நிறுவனம் முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுவதையே காட்டுகிறது.

WJS கட்டுரை:
https://www.wsj.com/articles/facebook-hate-speech-india-politics-muslim-hindu-modi-zuckerberg-11597423346

ட்விட்டரில் விரிவாக எழுதப்பட்ட இணைப்பு. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
https://twitter.com/SaketGokhale/status/1294653379046596608

Leave a Reply