தமிழினப்படுகொலை நடந்து 11ஆண்டுகள் ஆகிவிட்டது சமீபத்தில் இலங்கை எதிராக என்று சொல்லப்பட்ட அமெரிக்க தீர்மானம் கூறித்து கேட்டதற்கு அது முடிந்த போனதென்று இலங்கை அரசு அலட்சியாக கூறிவிட்டது. சரி இந்த தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா மற்றும் அதனை ஆதரித்த இங்கிலாந்து இந்தியா சீனா இரஷ்யா போன்ற நாடுகளின் நிலைமை என்னவென்றால் அவர்களும் ஆட்சிமாற்றத்தை காட்டி ஒதுங்கிக்கொள்கிறார்கள். ஆனால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு என்ன நீதி என்று யாரும் பேச ஆளில்லை. அதோடு யாரெல்லாம் தமிழர்களை கொலைசெய்தார்களோ அவர்களே இன்று இலங்கையின் ஆட்சி பீடத்திலும் ஏனைய அதிகார மட்டத்திலும் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் தமிழினப்படுகொலையை நினைவுபடுத்தும் விதமாகவும், தமிழினப்படுகொலையில் பங்கேற்ற நாடுகள் செய்த உதவிகள் குறித்தும், அமெரிக்கா தீர்மானம் மூலம் எப்படி நம்மை ஏமாற்றியது என்றும் அதனை மே17 இயக்கம் எப்படி கைக்கொண்டது என்றும், 11ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஈழத்தமிழர்களின் நிலையென்ன என்பது குறித்தான் பல்வேறு செய்திகளை தொகுத்து மே17 இயக்கக் குரலை கொண்டு வந்திருக்கிறோம்.
https://may17iyakkam.com/may17-kural-may-2020/
படித்துவிட்டுச் சொல்லுங்கள். நாம் பயணப்பட வேண்டிய தூரம் அதிகம். அதற்கு கடந்தகாலமும் அவசியம், நிகழ்காலமும் அவசியம். இரண்டையும் தெரிந்தால் தான் வருங்காலத்தை வசந்தகாலம் ஆக்கமுடியும்.
மே 17 இயக்கம்
9884072010