ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டி நேற்று 09.06.2020 அன்று அனில் அகர்வால் இந்திய ஓன்றிய பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதமெழுதிருக்கிறார். அதில் சம்பந்தமில்லாம பாகிஸ்தான், சீனா, தற்சார்பு பொருளாதாரம் என்றெல்லாம் பேசி பிரச்சனையை திசை திருப்பும் வேலையை செய்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமணடல மாசு குறைந்திருக்கிறது என்று சமீபத்திய செய்திகள் வந்திருக்கின்றது. எனவே அதனை மீண்டும் திறக்கும் முடிவை பிஜேபியின் மோடி எடுப்பாரெனில் அது தென் தமிழக மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம்.
சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நச்சுவாயு வெளியேறி பல உயிர்களை காவு வாங்கியதை மறந்துவிடவேண்டாம். அதனைவிட அடர்த்தியாக மக்கள் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை சுற்றி இருக்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தான் நச்சுஆலைக்கெதிராக போராடி அரசின் கொலைபாதகச்செயலால் 13 தமிழர்கள் தங்களது உயிரை கொடுத்திருக்கிறார்கள்.
ஆகவே இந்த ஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்பது தான் தமிழ் மக்களின் கோரிக்கை. ஆகவே அனில் அகர்வாலின் கோரிக்கையை ஆரம்பக்கட்டத்திலேயே மோடி அரசு நிராகரிக்க வேண்டும். தேவையில்லாமல் மக்களை மீண்டும் போராட்டகளத்திற்கு இழுத்துவிடவேண்டாம்.
மே17 இயக்கம்
9884072010