விவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா? விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு?

விவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா? விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு?

நேற்று 02.06.2020 தமிழக அரசு அரசாணை 338 ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அது ’தமிழ்நாடு வேளான் விளைபொருட்கள் விறபனை (ஒழுங்குபடுத்துதல்)சட்டம், 1987இல் சீர்திருத்தம்’ மேற்கொள்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசரசட்டம். https://cms.tn.gov.in/…/fi…/press_release/pr020620_388_0.pdf . இந்த சட்டத்தின் மூலம் இனி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அரசிடம் மட்டுமே விற்பதற்கு பதிலாக ஆங்கிகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், கிடங்குகளிலும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்யலாமென்று சட்டத்தை மாற்றியிருக்கிறது. (நன்றாக கவனிக்கவும் மக்களுக்கு நேரடியாக விற்க அனுமதியில்லை. தனியார் முதலாளிகளிடம் மட்டுமே). இந்தசட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அதாவது.

1.இனி விவசாயிகளின் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யாது. அந்த பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிகொள்கிறது.

2.அரசு கொள்முதல் செய்வதால் தான் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலைநிர்ணயம் மூலம் ஓரளவுக்கு (இதுவே சரியில்லை) விலை கிடைக்கிறது. இனி அதுவும் கிடைக்காது. தனியார் முதலாளிகள் சொல்வது தான் விலை. அவர்கள் விற்க்கும் விலைக்கு தான் பொதுமக்கள் வாங்க வேண்டும். விலை நிர்ணயம் முழுவதும் தனியார் கைக்கு போகிறது.

3.அரசு கொள்முதல் செய்வதால் தான் அதனை குடோனில் வைத்து பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு கொடுக்கமுடிந்தது. தற்போது அதுதானே நடக்கிறது. இப்பகொள்முதலே செய்யமாட்டோமென்றால் எப்படி பேரிடர் காலங்களில் கொடுக்கமுடியும்.

4.அரசு கொள்முதல் செய்யவில்லையென்றால் அரசின் குடோன் எதற்கு முக்கியமாக ரேசன் கடைகளுக்கு பொருட்கள் எப்படிவரும்? பொருட்கள் இல்லாத ரேசன் கடைகளையும் ஊழியர்களையும் அரசு வைத்திருக்குமா?

ஆக இந்த அவசரசட்டத்தின் மூலம் முதலில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலைகூட அவர்களின் வேளான் பொருட்களுக்கு கிடைக்காமல் பெருத்த நஷ்டமேற்பட்டு விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும். அடுத்து விலை நிர்ணயம் முழுவதும் சந்தை முதலாளிகள் வசம் சென்றால் பெட்ரோல் டீசல் போல் தினந்தோறும் ஒரு விலைக்கு உணவு பொருட்கள் விற்கபப்டும். பணமிருப்பவர்களுக்கு மட்டுமே உணவு என்ற மோசமான நிலை உருவாகும்.

இவ்வளவு ஆபத்துக்கள் உள்ள இந்த ’வேளான் விளைபொருட்கள் சந்தைபடுத்துதல் ஒழுங்குமுறை’ அவசரச்சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்.

மே17 இயக்கம்
9884072010.

Leave a Reply