தமிழக அரசே! கொரானா அச்சுறுத்தல் காரணமாக +1 மற்றும் +2 இறுதிதேர்வு எழுதாத 70 ஆயிரம் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 க்கும் மேல் மறுதேர்வு நடத்துக – மே17 இயக்கம்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து விட்டு, பதினொன்றாம் வகுப்பிற்கும் பன்னிரண்டாம் வகுப்பிற்கும் இறுதித் தேர்வை வைத்தால் யார் தான் எழுத முடியும். ஆகவேதான் எழுபதாயிரம் பேர் இறுதித் தேர்வை எழுதாததற்கு மாணவர்களின் மீது குற்றம் சொல்வதில் ஞாயம் இல்லை.
அரசே கொரானா குறித்து ஆயிரம் அச்சத்தை உருவாக்கி விட்டு பேருந்து முதல் கடைகள் வரை அனைத்தையும் அடைத்து வைத்துவிட்டு மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம்.
ஆகவே பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதாத 70,000 மாணவர்களுக்கு எப்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்ததோ, அதேபோல தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
குறிப்பு:
மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் 11 மற்றும் 12 வகுப்பு இறுதி தேர்வினை எழுத முடியாத 70,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாற்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென்று வைத்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அவர்களுக்கு மாற்று தேர்வு நடத்தப்படுமென்று அறிவித்திருக்கின்றது.
இந்த கோரிக்கையை ஏற்று இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி
மே17 இயக்கம்
9884072010