மத்திய மாநில அரசுகளே!மலேசியாவில் சிக்கி தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தமிழர்களையும், ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்டிடுக

மத்திய மாநில அரசுகளே!மலேசியாவில் சிக்கி தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தமிழர்களையும், ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்டிடுக..

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரானா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் தங்களது நாட்டின் விமான சேவையை முற்றிலும் ரத்து செய்திருக்கிறது. இதனால் தமிழகத்திலிருந்து படிக்க, வேலைக்கு சென்ற பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அந்தந்த விமான நிலையங்களிலேயே தவிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

அப்படியாக தமிழகத்திலிருந்து மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் சென்றிருந்த 10 தமிழக மாணவர்களும், சுற்றுலாவுக்குச் சென்ற 200க்கும் மேற்பட்டவர்களும் ஒருவேளை உணவுகூட இல்லாமல் தங்களது சொந்த ஊரான தமிழகத்திற்கும் வர முடியாமல் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

மேலும் கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டினால் சிறை படுத்தப்பட்டு அங்கு மிகுந்த துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் தங்களை மீட்கக்கோரியும், சில நாட்களுக்கு முன்பாக காணொளி மூலம் கேட்டிருந்தார்கள்.

ஆகவே மலேசியாவில் சிக்கி தவிக்கும் 209க்கும் மேற்பட்ட தமிழர்களையும், ஈரான் நாட்டில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில அரசு அழுத்தம் தரவேண்டுமாய் மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே17இயக்கம்
9884072010

Leave a Reply