தமிழ்த்தேசிய பேராசிரியர் அறிவரசன் அவர்களின் இழப்பு தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பேரிழப்பு!
ஐயாவுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!
பேராசிரியர் அறிவரசன் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசத்திற்கு தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பின் பேரில் நேரில் இரண்டாண்டுகள் பணியாற்றினார்.
முக்கியப் போராளிகள், குழந்தைகள், மக்கள் என அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கும் வேலையை 2006ம் ஆண்டு முதல் 2008 வரையில் இப்பணியை செய்தார். ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற இவருடைய நூல் முக்கியமானது.
மே பதினேழு இயக்கத்துடன் தொடர்ச்சியாக தோழமை சக்தியாக தோள் கொடுத்து வந்தவர்.
பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று தமிழ் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மற்றும் பெரியாரிய இயக்கங்களுடன் இணைந்து பல்வேறு அரசியல் மற்றும் பகுத்தறிவுப் பணிகளில் ஈடுபட்டவர்.
ஐயாவின் உடல் இன்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படுகிறது.
ஐயாவுக்கு மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தினை செலுத்துகிறது.
– மே பதினேழு இயக்கம்