அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்
2019 இந்திய தேர்தலை மனதில் வைத்து அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த மோடிக்கு எப்படி மிகப்பெரிய வரவேற்பை டிரம்ப் கொடுத்தாரோ, அதுபோல வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறுகிற தேர்தலை ஒட்டி இந்தியாவிற்கு பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளில் வருகை தரவிருக்கிற டிரம்புக்கு சுமார் 70 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கான பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாட்டை இந்திய அரசு செய்ய இருக்கிறது.
அவரின் வருகையின் போது உலகத்திலேயே பெரிய விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து மாநாட்டில் பேச போகிறார் என்கிற செய்தி மட்டுமே இந்தியர்களின் காதில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விசயமான இந்தியாவின் விவசாய மற்றும் பால் உற்பத்தி துறையில் அமெரிக்காவின் பாராசூர நிறுவனங்களை எந்தவித வரியும் இல்லாமல் அனுமதிக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தாக இருக்கிறது என்பதை சொல்ல மறுக்கிறார்கள்.
கடந்த வருடம் 2019 அக்டோபர் மாதம் பிராந்திய ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, இலங்கை, ஜப்பான், நீயூசிலாந்து மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership -RCEP) என்ற ஒன்றை உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடும் ஏற்பாடு என்று இந்திய விவாயிகள் தொழில் வல்லுநர்கள், தமிழகத்தில் மே 17 இயக்கம் நவம்பர் 02ஆம் தேதி இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடக்கூடாதென்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாத மோடி அரசு, மேற்ச்சொன்ன கூட்டமைப்போடு பல கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஈடுபட்டது. நவம்பர் 04’2019 அன்று நடந்த கடைசி கூட்டத்தில் நரேந்திர மோடி அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தீடிரென்று அறிவித்தார். அதற்கு பிஜேபி சொன்ன காரணம் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட்டால் இந்தியாவின் உள்நாட்டு தொழில்கள் குறிப்பாக பால் வியாபாரம் மற்றும் துணி உற்பத்தி மிகப்பெரிய பாதிப்படையும் என்றும் மேலும் இதனை நம்பியிருக்கிற தொழிலாளார்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமென்றும் சொல்லித்தான் அந்த ஒப்பந்தத்தில் இறுதி நிமிடத்தில் கையெழுத்திடாமல் வெளியேறியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பேர் சொல்லும்போது கேட்காத மோடி தீடிரென்று விலகியது ஏன் என்பது அப்போது மர்மமாக இருந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.
அதாவது இந்தியாவின் உள்நாட்டு சந்தையை அமெரிக்காவுக்கு தாரை வார்க்கவே மோடி கடைசி நேரத்தில் அப்போது அந்த கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியிலும் சரி, பால் பொருட்கள் உற்பத்தியிலும் சரி 19% பூர்த்தி செய்கிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 42ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது.சுமார் 10கோடி பேர் பலனடைகிறார்கள். இப்படிப்பட்ட மிகப்பெரிய சந்தையை அமெரிக்காவுக்கு எழுதிக்கொடுக்கும் ஒப்பந்ததில் கையெழுத்திடத்தான் டிரம்ப் இந்தியா வருகிறார்.
இது இல்லாமல் இறைச்சி மற்றும் பழங்கள் (ப்ளுபெர்ரி, செர்ரி) சோயபீன் கோதுமை போன்ற அமெரிக்க விவசாய பொருட்களுக்கான வரியை 100%திலிருந்து 10% குறைக்கும் ஒப்பந்தத்திலும் மோடியும் டிரம்பும் கையெழுத்திட இருக்கிறார்கள். அமெரிக்காவின் நலனுக்காக இந்தியாவின் 10கோடிக்கும் அதிகமான பேரை கொல்ல துணிந்திருக்கிறது மோடி அரசு.
எப்போது பார்த்தாலும் தேசபக்தி, தேசம் என்று பிதற்றும் பிஜேபி கும்பலின் தேசபக்தி என்பது இதுதான் என்பதை சாமானியர்கள் இப்போதாவது புரிந்துகொண்டு மோடி டிரம்ப் சந்திப்பை எதிர்க்க வேண்டும். இல்லையேல் மொத்த இந்தியாவையும் அமெரிக்காவுக்கு விற்றுவிட்டு இந்த கூட்டம் குளிர்காயும் இது என்ன மோடி கும்பலின் அப்பன் வீட்டு சொத்தா கவலைப்பட…
குறிப்புகள்:
1.https://www.indiatoday.in/…/modi-govt-dairy-chicken-us-elus…
2.https://www.livemint.com/…/india-offers-us-dairy-chicken-ac…
3.https://www.dtnext.in/…/Modi-offers-to-open-up-dairy-poultr…
மே 17 இயக்கம்
9884072010