5 மற்றும் 8 ஆம் பொதுத்தேர்வு முறை கைவிடக்கோரி பள்ளி கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் ஏன்?
மத்திய மோடி அரசு இந்தியாவில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆகவே அதனை கட்டுப்படுத்த கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தது. அந்த குழு கொடுத்த அறிக்கையின்படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை 2019.
இந்த புதிய கல்விக் கொள்கையில் 3 & 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஒரு பரிந்துரையை கொடுத்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றலை குறைப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது இதன் காரணமாக பள்ளியில் பாதியிலேயே படிப்பை நிருத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அனைவரும் கல்வி கற்கும் சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் இதற்கு நேர் மாறாக எதற்காக குழு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை சிதைக்கும் விதமாகவே மூன்றாம் வகுப்பிலிருந்து பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை அந்த குழு அளித்தது அவனை மோடி அரசும் நிறைவேற்றுகிறது.
ஆக இந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை என்பது மீண்டும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களை கல்விகற்கும் சூழலிலிருந்து அகற்றும் நடவடிக்கையே.
ஆகவேதான் மிக முக்கியமான நம் அடுத்த தலைமுறைக்கான போராட்டத்தை மே17 இயக்கம் கையில் எடுத்திருக்கிறது .இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், நம் அடுத்த தலைமுறையினர் மீது அக்கறை கொண்ட அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மே17 இயக்கம்
9884072010