உலகப்பொது வர்த்தகக் கழகத்தில் ரேஷன் கடையை மூடுவதற்கு பிஜேபி அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது என்று மே 17 இயக்கம் முதன்முதலாக ஆதாரத்துடன் அறிவித்ததில் இருந்து அதனை மறுக்கிறோம் என்கிற பெயரில் பிஜேபி கும்பல் எங்கே இன்னும் ரேஷன் கடையை மூடவில்லை என்று இன்றுவரை தங்களின் தவறை மறைத்து கேலி பேசுகிறார்கள்.
ஆனால் ரேசன் கடையை மூடுவது என்பது இன்று அறிவித்து நாளை போய் ஷட்டரை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டு மூடி செல்வது போல் அல்ல என்றும்,
முதலில் ரேஷன் கடையின் மூலம் பயன்பெறும் பயனாளர்களை குறைப்பார்கள், அடுத்து ரேசனில் கொடுக்கப்படும் பொருட்களின் மீதான வரியை உயர்த்துவது அல்லது மானியத்தை குறைப்பார்கள், அடுத்து வெளிப்படை தன்மை என்கிற பெயரில் மானியத்திற்கான பணத்தை வங்கியில் போடுகிறோம். நீங்கள் வெளிச்சந்தையில் எவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறீகளோ அதே பணத்தை கொடுத்து ரேஷன் கடைகளிலும் வாங்குங்கள் என்று சொல்வார்கள். அடுத்து ரேஷன் அட்டையில் கலர் வைத்து பிரித்து பொருள்களின் அளவை குறைப்பார்கள். இப்படி படிப்படியாக குறைத்து ஒரு கட்டத்தில் ரேஷன் கடையை இல்லாமல் செய்வதுதான் அவர்களின் திட்டம். பிஜேபி கும்பல் வழக்கம்போல மக்களை ஏமாற்றி வருகிறது. வேண்டுமானால் ஒரு சிறு உதாரணம் பாருங்கள்.
அதாவது இந்த மோடி அரசு எடுத்த சில சிக்கன நடவடிக்கையின் அடிப்படையில் விவசாயத் துறையில் 15,000 கோடியை சேமித்து இருக்கிறார்களாம்.இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். சரி அப்படி என்ன சிக்கன நடவடிக்கை எடுத்தார்கள் என்று நீங்கள் பார்த்தீர்களானால்.விவசாய பொருட்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் மானியத்தை குறைத்து இருக்கிறார்கள்.இதுதான் இவர்கள் எடுத்த சிக்கன நடவடிக்கை.
இப்போது யோசித்துப் பாருங்கள் மானியம் குறைவதால் என்னவாகும் விவசாய உற்பத்தி குறையும், உணவு உற்பத்தி குறைந்தால் சேமிப்பு குறையும், சேமிப்பு குறைந்தால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வராது, பொருட்கள் வரவில்லை என்றால் ரேஷன் கடையின் நிலைமை என்னவாகும்? இதுதான் இவர்களின் திட்டம்.
பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லட்ச கோடிகளை வரி விலக்கு அளிக்கும் இந்த பார்ப்பனிய பாசிச பிஜேபி அரசு தான். நாட்டில் 80 சதவீத மக்கள் பயன்பெறும் ரேஷன் கடையில் கிடைக்கும் விலை குறைந்த உணவு பொருட்களின் மீதான மானியத்தை/ குறைகிறது வரியை உயர்த்துகிறது என்றால் இந்த அரசின் பாசிசத்தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.
மே 17 இயக்கம்
9884072010