தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் ‘தொழிலுறவு சட்டம் 2019’ஜ மோடி அரசே திரும்பப் பெறு.
நவம்பர் 28’2019 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தொழிலுறவு சட்டம் 2019 என்ற புதிய மசோதாவை அறிமுகப்படுத்தினார். முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நல்லுறவை பேனாவும், இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகள் எளிதாக தொழில் தொடங்க ஏதுவாகவும் இருக்கவே இந்த மசோதாவை மத்திய பிஜேபி அரசு கொண்டு வருகிறது என்று அறிவித்தார்.
ஆனால் இந்த மசோதா தொழிலாளர்களின் உரிமையை அடியோடு மறுத்து, முதலாளிகளை குளிர்விப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த மசோதாவின்படி
1. பெரிய தொழிற்சாலைகள் தங்கள் விருப்பப்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சாலையை மூடவும் அல்லது தொழிலாளர்களை ஆட்குறைப்பு நடவடிக்கையையும் எடுக்கலாமென்றும்.
2. ஒப்பந்த தொழிலாளர்களை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் நிரந்தர தொழிலாளர்கள் ஆற்றாமல் வைத்துக்கொள்ளலாம் என்றும்
3. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் 75 சதவீதத்திற்கும் மேல் உள்ள தொழிலாளர்கள் ஒப்புதல் இல்லாமல் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட கூடாது என்றும் கூறுகிறது.
இது இல்லாமல் தொழிலாளர்களின் வேலை நாட்களை முதலாளிகளே நிர்ணயித்தல், பெண் தொழிலாளர்களுக்கான நலன் மறுப்பு, தொழிலாளர் நலத் திட்டங்கள் பல புறக்கணிப்பு என பல்வேறு வகையான தொழிலாளர் விரோத அம்சங்கள் இந்த மசோதாவில் இருக்கிறது.
இப்படிப்பட்ட மிக மோசமான ஒரு மசோதாவை மத்திய மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.