புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட வெட்டுக் குளத்தை மீட்க சுவரொட்டி ஒட்டிய எழுத்தாளர் துரை குணா கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குளத்தை மீட்க தொடர்ச்சியாக பல்வேறு மனுக்களை அளித்தும், போராடியும் வந்த துரை குணா அவர்கள், எந்த இடத்திலும் முறையான பதில் இல்லாத காரணத்தினால், குளத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், குளத்தைக் காக்க போராடிய துரை.குணாவை கைது செய்திருக்கிறார்கள். இது மோசமான எதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது.
தோழர் துரை குணா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010