பொன்பரப்பி சாதிவெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதி வெறி தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி மற்றும் பாமகவைச் சேர்ந்த சாதிய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 23-4-2019 அன்று சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் மற்றும் தோழர் பரந்தாமன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் அன்பு தனசேகரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் உலகநாதன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.