தோழர் திருமுருகன் காந்தி மீதான அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இயக்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதிப் பங்களிப்பினைக் கோருகிறோம்.
சிறை உணவினால் திருமுருகன் காந்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதுடன், பல்வேறு பொய் வழக்குகளையும் அவர் மீது அரசு ஏவி வருகிறது. பாராளுமன்றத்தில் பல்வேறு மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி நம் மீது திணித்திருக்கும் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தி, அவற்றை தடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்ம நேரத்தில் தோழர் திருமுருகன் காந்தி மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கும், இயக்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்குமான நிதிப் பங்களிப்பினை உங்களிடம் கோருகிறோம்.
மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற ஒரு நேர்மையான இயக்கம் மக்களிடம் தான் நிதியினைப் பெற முடியும். உங்கள் பங்களிப்பு இதில் மிகவும் அவசியமானது. இயக்கத்தின் நிலைப்பாடுகளில் உடன்பாடு கொண்ட தோழர்களிடம் நிதிப் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் பங்களிப்பினை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
Account Name: Susindran P
Account number: 37936911382
Account Type: Savings
State Bank of India
Ashok Nagar Branch
IFSC: SBIN0001857
MICR: 600003009
பணம் அனுப்பிய பின், அனுப்பிய தொகை குறித்த விவரங்களை தவறாமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 9884072010 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
பின்குறிப்பு: தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமே நிதிப் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம்.
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து நிதி உதவி பெறுவது என்பது இயலாது. வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிதிப் பங்களிப்பு செய்ய விரும்பினால், இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கவும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010