இந்திய இராணுவத்தை முழுக்க தனியார் மயமாக்கிய தேசபக்தர் மோடி
நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தத்ற்கு பிறகு இந்திய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முன்னைய காங்கிரஸ் அரசை விட இரண்டு மடங்காக உயர்த்தியது. இதில் பெரும்பாலும் இராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காகத்தான். உதாரணத்திற்கு 2014இல் ஆட்சியை இழப்பதற்கு முன் காங்கிரஸ் இராணுவத்திற்கு 2லட்சம் கோடியை நிதியாக ஒதுக்கியிருந்தது. அதுவே இன்று 2017-2018 & 2018-2019 பட்ஜெட்டில் 3லட்சம் கோடியாகவும்(359,000 crore) & நான்கு லட்சம் கோடியாகவும் (404,365 crore) உயர்த்தப்பட்டிருக்கிறது.
இராணுவத்திற்கு நிதி ஒதுக்குவது நல்லது தானே ந இராணுவம் வளருமே என்றெல்லாம் யாரும் எண்ணிவிடவேண்டும். இவர்களின் திட்டமே இந்த நிதியைக்கொண்டு தனியார் முதலாளிகளை வளர்ப்பது தான். அதனால் தான் 2014க்கு பிறகு ரிலையன்ஸ், அதானி, டாடா, எல்&டி போன்ற இராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் முன்னனுபவமேயில்லாத பனியா கும்பல்கள் தீடிர் தீடீரென்று இராணுவ தளவாட தயாரிப்பில் இறங்கியது.
அதற்கேற்றார்போல மோடி அரசும் அதிக விலைக்கு இராணுவ தளவாடங்களை இவர்களிடமிருந்து வாங்குவதற்கு வரிசையாக ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டேயிருக்கிறது. உதாரணத்திற்கு இரபேல் போர்விமானம் வாங்குவதில் நடந்ததை பார்த்தாலே எளிதில் புரிந்துகொள்ளலாம். அதாவது 126போர்விமானங்களை 56,000கோடிக்கு பிரான்ஸ் நாட்டின் டெசால்ட் நிறுவனமும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்க முந்தைய அரசு ஓப்பந்தம் போட்டது. ஆனால் 2015இல் மோடி அரசு முந்தைய அரசின் ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டு, பிரான்ஸ் நிறுவனத்தோடு ஏற்கனவே இருந்த அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் நிறுவனத்தை நீக்கிவிட்டு தனியாரான ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்து அதே 56000கோடிக்கு வெறும் 36விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இப்படி தனியாரின் லாபத்திற்காக அதிக விலைக்கு வாங்குவதினால்தான் இராணுவ பட்ஜெட் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.
இது இரபேல் விமானம் வாங்குவதில் மட்டும் நடந்த ஒரு ஊழல். இன்னும் அமெரிக்க நிறுவனத்தோடு இணைந்து எல் & டி நிறுவனம் இந்திய கப்பற்படைக்கு தேவையான கப்பல் தயாரிக்கும் ஓப்பந்தம் (சென்னை காட்டுபள்ளியில் தான் இதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது). அதேபோல ஜீலை 15,2018இல் அமெரிக்க நிறுவனமான போயிங் ஏர்கிராப்ட்ஸ்வுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிட் நிறுவனமும் இணைந்து இராணுவத்திற்கான ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதுபோக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விசாகப்பட்டினத்திலும் அதானியின் நிறுவனம் குஜராத்திலும் இந்திய கப்பல்படைக்கு தேவையான கப்பல் தயாரிப்பில் இருக்கிறது. இப்படி மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இரானுவ தளவாட தயாரிப்பு முழுக்க முழுக்க தனியாரிடம் போயி பொதுத்துறை நிறுவனங்கள் மூடும் நிலமைக்கு வந்துவிட்டது.
இதனை கண்டித்து தான் DRDO உள்ளிட்ட இராணுவ தளவாட தயாரிப்பில் இருக்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3லட்சத்திற்கும் மேலானவர்கள் இன்று காலவரையன்ற வேலைநிறுத்ததைத்தை இந்தியா முழுவதும் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இதை எதைபற்றியும் கவலைப்படாமல் மூன்று நாட்களுக்கு முன் திருச்சியில் வைத்து இராணுவ அமைச்சர் நிர்மலாசீதாராமன் இராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் ’இந்திய இராணுவ தளவாட கேந்திரத்தை’ தமிழகத்தில் தொடங்கி வைத்து தனியாருக்கு சிவம்பு கம்பள வரவேற்ப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த இராணுவ கேந்திரத்தில் முக்கியமாக தயாரிக்கவிருப்பது இராணுவ விமானங்களுக்கான உதரிபாகங்கள் தான். இதனை தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதற்கான நிதியை ஒதுக்கி இதனை அறிவித்தார். அதனால் தான் அடுத்தடுத்த சில மாதங்களில் அதானி ஏரோபேஸ் லிமிட் ரிலையன்ஸ் ஏரோபேஸ் லிமிடெட், டாடா ஏரோபேஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனங்கள் ஈசல் போல முளைத்ததன. இவர்களுக்கு தான் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தொழில்துறை அமைச்சர் சம்பத்தும் மாங்கு மாங்கு என்று நம் நிலத்தையும் நம் வளத்தையும் வாரி கொடுக்கப்போகிறார்கள்.
ஆக நாட்டுமக்களின் மீது கடுமையான வரிகளை போட்டு அவர்களின் பைகளில் கையைவிட்டு அள்ளிச்சென்ற நம் பணம் இப்படி தனியாருக்கு இறைக்கப்படுகிறது.கூடவே நாட்டின் பாதுகாப்பும் விற்கப்படுகிறது.