ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது

- in ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது.

ஸ்டெர்லைட்டின் முதலாளி அனில் அகர்வாலுக்காக பசுமை தீர்ப்பாயத்தில் தருன் அகர்வால் அறிக்கை வாசிக்கிறார். பனியா மார்வாடிகள் கூட்டத்தின் வணிக நலனுக்காக இந்தியாவின் அரசும் அதிகாரிகளும் வளைந்து நிற்பது புதிதல்ல. இந்த நாடே பனியா மார்வாடிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டதாய் தந்தை பெரியார் 1947ல் அறிவித்ததை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இது புரியாமல் இங்கே அரசியல் சாசன ஆட்சி நடக்கிறது என தமிழர்கள் நம்புகிறார்கள்.

வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய அறிக்கை இது. தமிழக அதிமுக அரசின் பொறுப்பற்றத்தனத்தால் நடந்த அநீதியே இது.

சிப்காட் வளாகத்தில் நிறுவனம் நடத்த கொடுத்த அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்து இந்நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

15 போராளிகளின் ஈகம் வீண் போகக்கூடாது. ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்

 

Leave a Reply