வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து தஞ்சை மாவட்ட மக்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இன்னும் மின்சாரம் இல்லை. எத்தனை நாட்கள் கழித்து வருமென்றும் தெரியவில்லை. நெடுஞ்சாலைகள் வழியே மட்டுமே பறக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கார்களுக்கு மத்தியில் இவர்களை சந்தித்து ஆறுதலாய் பேசவும் ஆட்கள் இல்லை. தொடர்ந்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகிறார்கள்.
பெரும்பாலான மக்கள் பல்வேறு கூட்டுறவு உதவிக் குழுக்களின் கீழ் சிறு சிறு கடன்கள் பெற்றிருக்கிறார்கள். வாழ்வாதார இழப்புகளோடு சேர்த்து, கறாரா கடன் வசூல்களும் இந்த மக்களின் வாழ்க்கை நிலையை மோசமாக்கியிருக்கிறது.
அனைத்து கடன்களையும் அரசு பொறுப்பேற்றுக் கொண்டு, சேதங்களுக்கான இழப்பீடுகள் உடனே வழங்கப்பட வேண்டும். சேதமடைந்த வீடுகளை அரசே சரிசெய்து தந்திட வேண்டும். கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்திட வேண்டும்.