கஜா புயலின் கொடூரத்திலிருந்து மீளாத மக்கள், விடாது பெய்யும் மழை டெல்டா மக்களின் வாழ்வினை மேலும் துயரம் மிகுந்ததாக ஆக்கியுள்ளது.
வீட்டின் கூரைகள்,ஓடுகள் எல்லாம் புயலில் அடித்துச் செல்லப்பட்டதால், மழை மக்களின் நிலையினை மோசமாக்கியுள்ளது.
கூரைகளை மூடுவதற்கான தார்பாலின்களும், குளிரிலிருந்து காப்பதற்கான போர்வையும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. நிறைய கிராமங்கள் அரசின் எந்த தடயமும் இல்லாமல் இருக்கின்றன.
கஜா புயல் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலிமையாக எழுப்புவது மிகப் பெரிய தேவையாக இருக்கிறது.
இத்தகைய கிராமங்களில்தான் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
தார்பாலின், போர்வைகள் முதன்மையான தேவைப்பொருட்களாக இருக்கின்றன. நிவாரணப் பொருட்கள் அல்லது நிதி அளித்திட தொடர்புக்கு: 7094198005 | 9884072030