பார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்
நவீன இந்தியாவை உருவாக்க ஐ.ஐ.டிக்கள் தேவையென்று சொல்லி ஜவகர்லால் நேரு 1950இல் காரக்பூரீல் முதல் இந்திய தொழில்நுட்ப கழகத்தை (Indian Institute of Technology) உருவாக்கினார். அவரது பிறந்த நாளான இன்று (நவம்பர் 14,1889) அதன் நிலைமை என்னவாக மாறியிருக்கிறது என்பதை தான் பார்க்கபோகிறோம். இன்று நாடுமுழுவதும் மக்களின் வரிப்பணம் மிகப்பெரிய அளவில் செலவிடப்பட்டு இன்றைய கணக்கிற்கு 23 ஐ.ஐ,டிக்கள் இந்தியா முழுவதும் இருக்கிறது. இதுபோல மற்ற உயர்கல்வி நிறுவனங்களான IIMs, NITs and IISERs. போன்ற எல்லா கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டது. இவைகளுக்கு அரசு ஒதுக்கும் வருடாந்திர தொகை தவிர கூடுதலாக ஓவ்வொரு வருடமும் 25ஆயிரம் கோடி ஓதுக்கப்படுகிறது. ஆக கடந்த நான்கு வருடத்தில் மட்டும் 1லட்சம் கோடி மக்களின் வரிப்பணம் இந்த உயர்கல்வி நிறுவங்களுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. https://www.financialexpress.com/…/big-gift-for-ii…/1080261/
இவ்வளவு செலவு செய்து நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களோ தங்களின் இலக்கினை குறைந்தபட்ச அளவிலே கூட எட்டவில்லை என்பது தான் கடந்த 68 ஆண்டுகளான சோகம். மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு கட்டப்பட்ட இந்த கல்லூரிகள் உலகளவில் என்ன தரத்தில் இருக்கிறது என்பதை பாருங்கள் படம் 01. அதாவது இந்தியாவில் முதல் இடத்தை பிடித்த கல்லூரி உலகளவில் 420ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. முதல்நிலை கல்லூரிக்கே இந்த நிலைமையென்றால் அடுத்தநிலையில் இருக்கும் கல்லூரிகள் நிலமை இன்னும் மோசம்.
இவ்வளவு மோசமாக உயர்கல்வி நிறுவனங்கள் மாறியதற்கு உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் காலியிடங்கள் மிக அதிகமாக இருக்கிறது. அதை அரசு நிரப்ப மறுக்கிறது.ஆகவே தான் எங்களால் தரமான மாணவர்களை உருவாக்க முடியவில்லை. அதனால் உலகளவில் தரவரிசை பட்டியலில் பின் தங்குகிறோமென்று சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் சொல்கிறார்கள். இது உண்மை தான் இந்தியாவிலிருக்கிற உயர்கல்வி நிறுவனங்களில் 40%க்கும் மேல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது பார்க்க படம் 02.
இவ்வளவு இடங்கள் ஏன் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது குறித்து அரசிடம் கேட்டபோது தான் உண்மை வெளிவந்தது. அதாவது இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஓதுக்கிறது, ஆனால் ஆசிரியர் பணிக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லையென்று கடந்த ஜீலை 23,2018 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ஒரு பதிலை (உண்மையை) சொன்னார். அப்படியென்றால் கடந்த 68 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது வீண்தானே?
இதில் மறைந்திருக்கிற இன்னொரு உண்மையை யாரும் பேசுவதில்லை. அது அப்படியென்றால் இந்த 68வருடமாக இந்த உயர் கல்வி நிறுவங்களில் படித்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்கள் யார்? என்பது தான். அதற்கும் ஒரு கேள்விக்கு மத்திய இணையமைச்சரே அந்த பேட்டியில் பதில் சொல்லியிருந்தார். அதில் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்,சிலர் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அதிக ஊதியத்திற்கு சென்றுவிடுகிறார்கள் என்று சொல்லியிருந்தார். ஆக மக்களின் வரிப்பணத்தை கொண்டு படித்து பட்டபெற்ற பெரும்பாலனவர்கள் யாரென்று பார்த்தால் 80%க்கும் அதிகமானோர் பார்ப்பனர்களே.
நமக்கெல்லாம் நன்றாக தெரியும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணிகளுக்கு இடஒதுக்கீடு முற்றிலும் கிடையாது. இங்கு கோலோச்சுபவர்கள் 95% பார்ப்பனர்களே. பார்க்க படம் 03 & 04 & 05.இப்படியாக பெரும்பான்மை இடங்களை பிடித்துக்கொண்டு மற்ற யாரையும் நுழைய விடாமல் அதையும் மீறி வருபவர்களையும் சாதியை சொல்லி இழிவுபடுத்தி மனவுளைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களை சாவுக்கு தள்ளுகிறார்கள் இந்த பார்ப்பனர்கள் . நம் பணத்தைக்கொண்டு படித்து சொகுசாக வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களின் உயர் பதவிகளில் உட்கார்ந்து கொள்ளும் இவர்கள் தான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவங்கள் உலகளவில் தரத்தினை இழந்து இன்று அவமானப்பட்டு நிற்கிறது.
ஆகவே ஜவகர்லால் நேரு எந்த நோக்கத்திற்காக இந்த உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினாரோ அந்த நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தால் நிறைவேறவில்லை என்பது இதன்மூலம் கண்கூடாக தெரிகிறது. ஆக இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் இடஓதுக்கீடு முறையை அமல்படுத்தி அனைத்து வகுப்பாரும் உள்ளே நுழைந்து படிக்கும்படியான சட்டத்தை அரசு செய்யவேண்டும். இதுவே இல்லையென்றால் இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் இப்போது இருக்கிற நிலைமைக்கும் மோசமாக போய் முற்றிலுமாக செயலிழந்து போகும் நிலை உருவாகும்.