மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வலியுறுத்தியும் SDPI கட்சியின் சார்பில் 07-09-2018 வெள்ளி அன்று மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் அதன் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.
இதில் SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, பாப்புலர் ஃப்ரண்ட் துணைத் தலைவர் முகம்மது அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.
திருமுருகன் காந்தி விடுதலைக்காக SDPI கட்சி எடுத்துள்ள இந்த முன்னெடுப்பிற்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.