இந்தியாவில் இருக்கிற 29 மாநிலங்களில் சிறந்த முதல் ஐந்து மாநிலங்களில் நாலு மாநிலங்கள் பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்கள் :
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் public affairs index (PAI) என்கிற நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவில் இருக்கிற 29 மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, சுற்றுப்புற சூழல், நிர்வாகம், நீதி, போன்ற 30 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எந்தெந்த மாநிலங்கள் சிறந்தவை என்ற ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. http://publicaffairsindex.in/#/2018/public-affairs-index
அதன் அடிப்படையில் 2018க்கான ஆய்வு முடிவை சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. http://publicaffairsindex.in/#/2018 அதில் முதல் 5 இடங்களை பிடித்திருக்கிற மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். அதாவது இந்தியாவில் மொத்தமிருக்கிற 29 மாநிலங்களில் 18 மாநிலங்கள் பிஜேபியும் அதன் கூட்டணிக் கட்சியும் ஆட்சியில் இருந்து வருகிறது. இது கிட்டத்தட்ட இந்தியாவில் 63% மாநிலங்கள் பிஜேபி வசம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது சிறந்த மாநிலங்களில் முதல் 4 இடங்களை பிஜேபி ஆட்சியில்லாத தென்னிந்திய மாநிலங்கள் பிடித்திருக்கிறது. முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கிர மாநிலங்களின் விபரங்கள் வருமாறு.
1.கேரளா
2.தமிழ்நாடு
3.தெலுங்கானா
4.கர்நாடகா
5.இமாச்சலப் பிரதேசம்
இதில் இமாச்சலபிரதேசம் மக்கள்தொகை அளவில் மற்ற எல்லா மாநிலங்களை விட மிக்குறைவான மக்களுள்ள மாநிலம். இதை தவிர மற்ற அனைத்தும் பிஜேபியோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சி செய்த மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு என்பது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொன்ன ‘எல்லோருக்குமான வளர்ச்சி’ development for all என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட முழக்கங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆய்வு ஆகும். பார்க்க படம் :
ஆகவே இந்த நான்கு ஆண்டுகளில் பிஜேபி அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லிய எதையும் நிறைவேற்றவில்லை என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆகவே பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் வளரவில்லை என்று தொடர்ந்து பிஜேபி ஆட்கள் சொல்லிவருவது பொய் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.