ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினை எதிர்த்து இணையதளங்களில் பெருமளவிலான செய்திகள் பரவி வருவதால் இணையதளங்களை முடக்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இணையதள சேவையினை அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
தற்போது மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் முகநூல் கணக்கினை அரசு முடக்கியுள்ளது.
தொலைக்காட்சி ஊடகங்கள் மறைப்பதை, சமூக ஊடகங்கள் வழியாக தோழர்கள் செய்திகளை பரப்பி வருவதால் இப்போது சமூக ஊடகத்திலும் அரசு கைவைத்துள்ளது. நாளை சென்னையில் தலைமைச் செயலக முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக திருமுருகன் காந்தியின் முகநூல் கணக்கினை முற்றிலுமாக அரசு முடக்கியுள்ளது.
அரசின் முடக்குதல்களுக்கு எதிராக நமது குரலினை வலிமைப்படுத்துவோம்.