புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளான 14-4-2018 சனி அன்று காலை ஆம்பூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.
அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுதும் சமூகநீதிக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும் போராடினார். ஆனால் இன்று அவரின் உழைப்பு மொத்தமும் இந்திய அரசினால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
அனிதாவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றாக வேண்டும் என்றும், இனி ஒரு அனிதாவை நாம் இழக்கக் கூடாது என்றும், அதற்கு நீட் தேர்வினை ஒழித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் தோழர்கள் பேசினர்.
மேலும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்படுவதை கண்டித்தும் தோழர்கள் பேசினர்.