காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், 177.25 டி.எம்.சியாக தமிழ்நாட்டின் தண்ணீர் குறைக்கப்பட்டது அநீதி என்பதை முன்னிறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் மே பதினேழு இயக்கத்தினால் 06-4-2018 அன்று நடத்தப்பட்டது.
காவிரி நீர் தமிழ்நாட்டின் உரிமை என்றும், கர்நாடகா சட்ட விரோத அணைகள் கட்டுவதற்கு முன்பு வந்து கொண்டிருந்த 378 டி.எம்.சியே தமிழர்களின் கோரிக்கை என்றும், தமிழனின் தண்ணீரை மறுக்கும் இந்திய அரசுக்கு எமது வரிப்பணம் மட்டும் எதற்கு என்றும் தோழர்கள் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தோழர் நீலகண்டன், மதிமுகவின் தோழர் விடுதலைவேந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் தமிழரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வீரன் வெற்றி வேந்தன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பழ.ராசேந்திரன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் கண்டன் உரையாற்றினர்.