மோடியும் அவரின் சங்பரிவார கூட்டமும் தேசபக்தர்களா?
இந்திய ஒன்றிய அரசின் சட்டத்தை மீறக்கூடாதென்று நமக்கு மூச்சுக்கு முன்று தடவை பாடம் நடத்தும் மோடி வகையறாக்கள். தொடர்ந்து இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். உதாரணமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதித்துறைக்குள் மத்திய அரசின் தலையீடு அதிகரித்திருக்கிறதென்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டினார்கள். இது
நீதித்துறை சுதந்திரமாக இயங்கவேண்டுமென்று எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை மீறுவதாகும்.
அடுத்து இந்திய ஒன்றியத்திலிருக்கும் அதிகாரிகளை தனது கட்சி கூட்டங்களுக்கு பயன்படுத்தி அரசியல் அமைப்பையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறது இந்த மோடி அரசு.
விரைவில் நடக்கவிருக்கிற திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தல்களுக்கான தேர்தல்களில் எப்படிப்பட்ட வியூகங்களை பிஜேபி வகுக்க வேண்டுமென்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விட்டில் ஜனவரி 14’2018 அன்று நடந்திருக்கிறது.இந்த கூட்டத்தில் பிஜேபியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க பிஜேபியின் தேர்தல் சம்பந்தமான ஒரு கூட்டத்தில் இந்தியாவின் ”தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும்” கலந்து கொண்டிருக்கிறார். பார்க்க படம் 01.
அப்படியென்றால் இவர் இந்தியாவின் பாதுகாப்பு அலோசகரா இல்லை பிஜேபியின் பாதுகாப்பு அலோசகரா என்று கேள்வி எழுகிறது. இதுகுறித்து திரிபுரா கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்தும் (பார்க்க படம் 02)
இதுவரை தேர்தல் ஆணையம் பிஜேபி மீதோ அல்லது சட்டவிரோதமாக கலந்துகொண்ட அஜித் தோவல் மீதோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படி இந்திய ஒன்றியத்தில் இருக்கிற அனைத்து துறைகளையும் தனது பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நலனுக்காக பயன்படுத்தி இந்திய அரசியலமைப்பையே கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர்களா தேசபக்தர்கள் நண்பர்களே.