கடந்த 2016 நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து மோடி அறிவித்து, இதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணம் ஒழியப் போகிறது என்று மிகப் பெரிய பொய்யை 130 கோடி மக்கள் முன்பு பேசினார். மோடி ஒரு கதாநாயகனாக ஊடகங்களாலும், சினிமா பிரபலங்களாலும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளால் கொண்டாடப்பட்டார். புதிய இந்தியா பிறந்துள்ளது என்றெல்லாம் நாடகமாடினர்.
மோடி அறிவித்த சில மணிநேரங்களில் இந்த நடவடிக்கையின் பின்னுள்ள சூழ்ச்சிகளை மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தியது. இது நிழல் பொருளாதாரம்(Shadow Economy) என குறிப்பிடப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களான(informal sector) சிறு தொழில் செய்வோரை அழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்பதைப் பேசினோம். இன்று மோடி அறிவித்து ஒரு ஆண்டு ஆகிறது.ஏழை மக்களின் சேமிப்புகளை வங்கிக்குள் பிடுங்கி, வரிசையில் நிற்க வைத்து மக்களைக் கொன்று, பல லட்சம் தொழிலாளர்களின் வேலையை பறித்து, விவசாயக் கூட்டுறவுக் கடன்களை முடக்கி விவசாயிகளின் கழுத்தை நெறித்து, ஏராளமான சிறு தொழில் செய்வோரை அழித்த இந்த நாளை கருப்பு நாளாக அனுசரிப்போம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010
காணொளி: