Press Meet : “Inside story of the Brutal Massacre of 20 Tamils by Andra State”
Chennai Press Club, Thursday 09 April, 11:30AM
பத்திரிக்கையாளர் சந்திப்பு:
“ 20 தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசின் நிகழ்ச்சி நிரலின் பின்னணி”
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் , வியாழன் 09ஏப்ரல், காலை 11.30 மணி காலை.
20 தமிழர்களின் பச்சைப் படுகொலையில் சந்திரபாபு நாயுடுவே முதல் குற்றவாளி. சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க வேண்டும்.
கொலை நடைபெற்ற இடங்களுக்கு தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜ் நிறுவனத்தின் பொருட்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். ஹெரிடேஜ்
நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்
செம்மரக்கடத்தலில் ஈடுபடும் ஆந்திராவின் பெரிய கட்சிகளின் கும்பல்களுக்கிடையே நடக்கும் மோதலில் அப்பாவி தமிழ் தொழிலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த 20 தமிழர்களை படுகொலை செய்த பொறுப்பு ஆந்திர முதல்வர் சந்திரபாபுவையே சாரும். உண்மையான , முழுமையான விசாரணை நடக்கும் என்றால் சந்திரபாபு நாயுடுவை கைது செய்யவேண்டி வரும்.
இதை ஆதாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று மே17 இயக்கம் வைத்தது.
சந்திரபாபு நாயுடுவின் நிறுவனமாக தமிழகத்தில் செயல்பட்டுவரும் “ஹெரிடேஜ்” நிறுவனத்தினை இழுத்து மூடுவதே இதற்கான எதிர்வினையாக அமையும். ஆகவே ஹெரிடேஜ் நிறுவனத்தினை புறக்கணிக்கும் போராட்டத்தினை மே17 இயக்கம் துவக்குகிறது.
– மே பதினேழு இயக்கம்