Participating in Debate tonight at NEWSX on Rajiv convicts release at 7:00 or 7:30 PM.
ஆங்கில தொலைக்காட்சிகளில் எழுவர் விடுதலை குறித்து செய்தி வெளியிடும் பொழுது ராஜீவை கொலை செய்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும்? அதுவும் உச்சநீதிமன்றத்தை மீறி செய்துவிட முடியும் என அங்கலாய்த்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தற்பொழுது ஒரு தொலைக்காட்சியில் விவாதித்த பொழுது
” இந்திய அரசிற்குத் தான் அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டதே பின் எப்படி விடுதலை கேட்பீர்கள்?” என்று கேள்வி கேட்டார்கள். ” இந்திய அரசு நாகரீகமடையவில்லை என்பதற்காக நாங்கள் விடுதலையைக் கோராமல் இருக்கமுடியாது. எனவே எங்களது அரசியல்சாசன உரிமைப்படி விடுதலை செய்ய கோருகிறோம்” என்றேன்.
“இந்தக் கொலைகாரர்களை எப்படி விடுதலை செய்ய கோரிக்கை வைக்கிறீர்கள். ஒருவர் விடுதலைப்புலி, மற்றவர் உதவி செய்தவர்.. இப்படிப்பட்டவர்களை எப்படி விடுதலை செய்யலாம்?” என்றார்கள். ”வழக்கு முடிந்து தீர்ப்பு சொல்லப்பட்ட பிறகு அவர்களை குற்றத்தோடு சேர்த்து பார்க்க முடியாது. அப்படி பார்க்கவேண்டுமென்றால், ஏன் இன்னும் சுப்பிரமணிய சாமியை நீங்கள்கைது செய்யாமல் இருக்கிறீர்கள். ஜெயின்கமிசன் அறிக்கை, வர்மா அறிக்கை என்னவாயிற்று?…இவர்கள் ஏழைகள், அப்பாவிகள், இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை, தவறாக வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன் என அதிகாரி பகிரங்கமாகச் சொன்ன பிறகும் எப்படி சிறையில் வைப்பீர்கள்?” எனக் கேள்வி கேட்டதற்கும் பதில் இல்லை.
வாக்குவங்கி அரசியலுக்காகச் செய்கிறார்கள் என்று கேட்டார்கள். வாக்கு கிடைத்து ஆட்சி அமைக்க முடியுமெனில் ஏன் பாஜக இதை செய்யவில்லை என்றேன். பதில் இல்லை.
மேலும், இந்த வாக்குவங்கி அரசியல் என்பதே அயோக்கியத்தனமான வார்த்தை. மக்கள் தங்கள் கருத்துக்களை வாக்குகளின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும் என்றாகிவிட்ட பிறகு வாக்குவங்கி என்பது எப்படி கெட்ட வார்த்தையாகிவிட முடியும்? அல்லது மக்களின் கருத்திற்காக ஒரு செயலை செய்வது தவறாகிவிடுகிறதா ? அல்லது அது தரங்கெட்ட அரசியல் என்று வரையறுப்பதன் பின்னால் உள்ள உளவியல் சிறுபான்மை உயர்சாதியின் அச்ச உணர்வா?.. மக்கள் தங்கள் கருத்துக்களை யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு தானே வாக்களிப்பார்கள். மக்கள் கருத்தை செயல்படுத்தத் தானே சனநாயகம்.
அப்படியே வாக்குவங்கி அரசியலுக்காக செய்தால் என்ன தவறு என்றேன்?..”வாக்குவங்கி அரசியலுக்காகத் தான் இது நடக்கிறது என்று ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள்” என்று சொல்லி விவாதத்தினை முடித்துவிட்டார்கள்.
இன்று இரவு 7 அல்லது 7.30 மணிக்கு விவாதிக்கலாம் வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த டில்லிக்காரனை தூக்கிக்கிட்டு அலையச் சொன்ன நம்ம ஊரு விடுதலைப் போராளிகளை நினைச்சா …..
சொத்து சேத்துவைக்கிறதா நினைச்சு, பாம்பு புத்தை வாங்கிக் கொடுத்திருக்காங்க..
ஜல்லிக்கட்டுல மாட்ட அவுத்து விட்டோம். இதுல என்ன செய்யப் போறோம்?
161 பிரிவை பயன்படுத்தும் நேர்மை, தைரியம் ஜெயலலிதா அரசிற்கு இருக்காது. செங்கொடி தியாகம் இல்லாமல் இருந்திருந்தால் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேறி இருக்காது.
தான் அடுத்த முதல்வராக வந்துவிட்டால் இந்த பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக நவம்பர் மாசத்துலேயே கருணாநிதி “மத்திய அரசு மனசு வைத்து இவர்களை விடுதலை செய்யனும்னு” அறிக்கை விட்டுட்டாரு. அதாவது இவரும் விடுதலை செய்யமாட்டாருங்கறத நமக்கு சூசகமா சொல்றாராம்.
வழக்கம் போல ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த , ஆகம விதி தீர்ப்புக்கு புகழ்மாலை கொடுத்த திக தலைமையும் திமுகவுக்கு முட்டு கொடுத்து மெளனவிரதம் காக்குது.
அதிமுகவோட ’ஒளிரும் நிகழ்காலம், மிளிரும் வருங்காலம்’ ஃபியூஸ் போயிருச்சு . தேர்தல்ல வெற்றி பெற்றாங்கன்னா அதிமுகவுக்கு மட்டும் ‘மிளிரும் வருங்காலம்’.
திமுகவோட ’நமக்கு நாமே’ நாமப்பட்டையை குழைச்சு ரெடியா வைச்சு இருக்கு. தேர்தல்ல முந்திரிக்கொட்டை மாதிரி ’நெத்தி’ய நீட்டுனா ’பட்டை’ போட தயாரா இருக்காங்க… முற்போக்காளராக இருந்தீங்கன்னா ‘ராமனுசர் பட்டை’ கிடைக்கலாம்.
இன்று இரவு 7 அல்லது 7.30 மணிக்கு நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் விவாதம்.,