தோழர் ரோகித் மரணத்தைத் தொடர்ந்து நடைபெரும் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெரும் போரட்டத்திற்கு சென்று இருந்தோம். பல்கலைக்கழக வாசலில் அடையாள அட்டை உள்ள மாணவர்களை மட்டுமே அனுமதிப்போம்
என்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டு, பின் பல்கலைக்கழக மாணவ தோழர்களால் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டோம்.
போராட்டத்தில் உண்ணாவிரம் இருக்கும் தோழர்கள் ஒரு பந்தலிலும், இடைநிக்கம் செய்யப்பட்டு கல்லூரி வளாகத்தில், பொது வெளியில் மறுக்கப்பட்ட தோழர்கள் dalit get to என்றுசமுக புறக்கணிக்கப்பட்ட அடையாளமாக விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் உருவாக்கிய இடத்திலும் இருந்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் ஓவியங்கள் வரைந்து கொண்டும் முழக்கங்கள் இட்டு கொண்டும் இருந்தனர். அந்த இடம் ஒரு முழுமையான போராட்டக்களமாக இருந்தது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகள் இயங்கிய போதும், அம்பேத்கர் மாணவர் இயக்கத்தினர் கல்வி நிறுவனத்தின் அதிகார துஸ்பரயோகத்தை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர் என்பது அங்கு சென்ற பொழுது மாணவ தோழர்களால் தெரியப்படுத்தப்பட்டது. ஓவ்வொரு ஆண்டும் பட்டியல் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான சேர்க்கைகள் நிரப்பப்பட இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தே வந்திருகிறார்கள். தற்பொழுது துணை வேந்தராக இருக்கும் அப்பாராவ் முதன்மை வார்டனாக இருக்கும் பொழுது, அவரது ஊழல்களை தட்டிக்கேட்ட பத்து ஒடுக்கப்பட்ட மாண்வர்களை நீக்கம் செய்யப்பட்டு, பின் அவர்கள் பெரும் போரட்டத்தின் மூலம் மீண்டும் தன் கல்வியை முடித்து இருகிறார்கள்.
இவ்வாறு பல தகவல்கள் மாணவ தோழர்கள் நேரடியாக சந்தித்த போழுது எங்களுக்கு தெரிந்தது. கடந்த காலத்தில் இந்திய பார்பனியத்தின் அதிகாரத்திற்க்கு எதிராக அவர்கள் போராடிய பொழுதுகளில், இன்று போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை பின் புலமாகக் கொண்ட மாணவ அமைப்புகள் துணை நிற்கவில்லை என்பதையும் அவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்திலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்கம் நிறைந்து, அவர்கள் ஓடுக்கப்பட்டும் சமூக புறக்கணிப்புகளுக்கு ஆளாகியும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் நினைவுபடுத்தினர்.
மேலும் அவர்கள் நாங்கள் எங்கள் நண்பனின் மரணத்தில் இருந்து அனுதாபம் தேடவில்லை நாங்கள் வெளியிட்டு இருக்கும் ஆவணங்களை வாசித்து உங்கள் பகுத்தறிவுக்கு உட்படுத்தி பாருங்கள். உங்கள் அறிவு ஜீவிதனத்தை சோதித்து பாருங்கள் அதன் பின் நீங்கள் உண்மையின் பக்கம் நில்லுங்கள் என்றனர்.
போராட்டத்திற்கு பலகலைகழக ஊழியர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் முழு ஆதரவாக போராட்டத்தில் இருக்கிறார்கள்.
பெரியார் பிறந்த தமிழகம் தங்கள் போராட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவுத்தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்கள்