கண்டன ஆர்பாட்டம் மற்றும் அரங்க கூட்டம் :அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம்

- in பரப்புரை
எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் மீது நடத்தப்பட்ட ஊடக பாசிசம், மற்றும் இந்துத்துவ சக்திகளின் பாசிசத்தை கண்டிக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு உண்டு. தமிழீழ போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் மௌனமாக இருந்த டெல்லியில் ஈழத்திற்காக குரல் கொடுக்க சனநாயக சக்திகளுடன் கைகோர்த்து நின்ற தோழர் அருந்ததி ராய் தனது ஆதரவை காசுமீர மக்களின் விடுதலைக்காகவும் கொடுத்தபோது இந்திய -ஆங்கில செய்தி தொலைகாட்சிகள் அருந்ததி ராயின் மீது கடுமையான பொய் செய்திகளை தாக்குதலாக தொடுத்தனர். அருந்ததிராயின் ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநில ஒடுக்குமுறை மற்றும் மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான குரலை தவறாக சித்தரித்து, அருந்ததி ராய் குறிப்பிட்டது போல அவரை ஒரு தாக்குதலுக்கு ஆளாக கூடிய ஒரு நபராக, தனிமனித பாதுகாப்பை சிதைக்க கூடிய செய்திகளை மக்களிடம் திணித்தார்கள்.  டைம்ஸ் நவ் என்கிற தொலைகாட்சியின் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி என்பவர் “அருந்ததி ஒரு தேச துரோகி என்பது போல சித்தரித்து அவரை தேச விரோதியாக கைது செய்ய வேண்டும்” என்கிற கருத்தை  அனைத்து மட்டத்திலும் திணித்தார். இவர் மேலும் ஒருபடி சென்று அருந்ததி ராயை ‘ இந்த இந்த’ பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தீர்ப்பும் கொடுத்தார். இத்தகைய ஊடக பாசிசம் தமிழீழத்தை, அதன் விடுதலை போரை   தவறாக சித்தரித்து , இலங்கை அரசு “பயங்கரவாதத்திற்கு எதிரான போராக” தமிழின படுகொலை போரை நடத்த துணை செய்தது. இதன் தாக்கத்தை இன்றளவும் நாம் எதிர்கொள்கிறோம். ஊடகத்தின் பாசிச சக்தியும் , அதனூடாக செயல்படும் அரசின் பயங்கரவாததிற்கு துணை போகும் பத்திரிகையாளர்களும் கண்டிக்க படவேண்டியவர்கள் . இவர்களை நாம் நேரடியாக சந்திக்க வேண்டி உள்ளது. ஊடகத்தின் இந்த பயங்கரவாதம், இந்துத்துவ சக்திகள் தேசத்தின் கவனத்தை திசை திருப்ப பயன்பட்டது.  ஜெய்பூர் குண்டு வெடிப்பில் தங்களின் பயங்கரவாத சதி வெளிப்பட்டு ஆர் எஸ் எஸ் தலைவர் கைது செய்யப்பட்ட செய்திகளை பின்னுக்கு தள்ளவும் அருந்ததிரைன் மீதான இந்த ஊடக தாக்குதல்கள் பயன்பட்டன. தமிழீழ படுகொலையை மறைக்க ஸ்ரீலங்கா அரசு இந்தி திரைப்பட விருது விழாவை நடத்திய போது தமிழர்களின் மீதான படுகொலையை மறைத்து ஸ்ரீலங்கா  அமைதியான நாடு என்ற பிம்பத்தை இவைகள் இந்தியாவில் ஏற்படுத்தின.  இவ்வாறு தொடர்ந்து உரிமைக்காக போராடும் மக்களுக்கு எதிராகவும் , அரச பயங்கரவாததிற்கு ஆதரவாகவும் செயல்படும்
இந்த சக்திகளை எதிர்கொள்வதும், வெல்வதும் வரும் காலங்களில் அரச பயங்கரவதத்தை எதிர் கொள்ள நமக்கு அடித்தளமாய் அமையும். அனைவரும் ஒன்று கூடுவோம். ஊடக, இந்துத்துவ பாசிசத்தை நாம் வெல்வோம்.

ஆர்பாட்டம் : 12 நவம்பர் , வெள்ளி மாலை 4 .30 , சைதை பனகல் மளிகை.

கண்டன கூட்டம் : 14 நவம்பர், ஞாயிறு  மதியம் , ஐகப் அரங்கம்- லயோலா கல்லூரி அருகில், நுங்கம்பாக்கம்

மே பதினேழு இயக்கம்
9444146806

அருந்ததி ராய் பற்றிய டைம்ஸ் நவ் செய்தி குறிப்பு:
http://www.timesnow.tv/Arundhati-Roys-seditious-speech-public/videoshow/4356863.cms

Leave a Reply