மூன்று மாத குழந்தையுடன் தங்கள் கை பிள்ளைகளை அழைத்து கொண்டு வந்து இருந்தார்கள் பெண்கள் . கைதாகிறோம், நாளையும் சேர்த்து சிறையில் வைப்பார்களோ, பொங்கலை கொண்டாடமுடியாது போகுமோ என்று எந்த கவலை கோடுகளும் இல்லாமல், வந்த நோக்கத்திற்கு நின்றார்கள். திட்டமிட்டபடி இந்த போராட்டத்தை சாலை மறியலாக மட்டும் இல்லாமல் , எதிரி யார் என்று அடையாலப்படுதுவது என்கிற நோக்கம் வைக்கபட்டது , வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்… மீனவனை காப்பாற்று , நட்ட ஈடு கொடு என்று இருந்த கோசங்கள் மாற்றப்பட்டன…. மீனவனை கொல்வதற்கு காரணம் காங்கிரெஸ் அரசு. குற்றவாளி சிங்களன் மட்டும் அல்ல, காங்கிரெஸ் அரசே, என்று மீனவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அடையாளம் காண்பிக்கவேண்டும் என்கிற திட்டப்படி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முற்றுகை முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முற்றுகைக்கு செல்லும்போது கிட்டத்தட்ட நான்கு வண்டிகளில் காவல்துறை தயாராய் தான் இருந்தார்கள். கைது செய்யப்பட்டு கோரிக்கை பற்றி கேட்கும் போது வைக்கப்பட்ட கோரிக்கைகள்
1 . இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்று எஸ் எம் கிருஷ்ணா, எ.கே அந்தோணி பதவி விலக வேண்டும்.
2 . கொலைசெய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு 5 லட்சத்திற்கு பதிலாக குறைந்தபட்சம் ” 2 கோடி” ருபாய் வழங்கப்பட வேண்டும் ( 180000 கோடி ருபாய் ஊழல் செய்தவர்களுக்கு இந்த கோரிக்கை தான் தகுந்த மரியாதையாய் இருக்கும்) …
3 . இந்திய கப்பல் படை மீனவர்களை காக்க தவறியதால் , மீனவர்களுக்கு தம்மை பாதுகாக்க ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும்.
பெண்கள் போராட்டத்தை பாரம்பரிய மீனவர் சங்கம் ஒழுங்கு செய்து இருந்தது. அதன் தலைவர் தோழர் மகேஷ் ஒருங்கிணைத்து இருந்தார். காவல் நிலையத்திற்கு உடனடியாக தோழர் பாரதி தமிழன் வந்திருந்தார். தோழர் சீதையின் மைந்தன் இறுதி வரை உடனிருந்து பல தகவல்களை மீனவர்களுக்கு உணர்த்தினார். பெரியார் தி. க தோழர்கள், நாம் தமிழர் தோழர்கள், வழக்கறிஞர் பாலாஜி, ராஜீவ் காந்தி என பலரும் மாலை வரை இருந்து விடுதலையை உறுதி செய்தார்கள். இறுதியில் மாலையில் பெண்கள் தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கும் போது திரும்ப திரும்ப காங்கிரஸ்ஐ மையப்படுத்தி தங்கள் குற்றச்சாட்டுகளை வைத்த போது, போராட்டம் வெற்றி என்றே சொல்லவேண்டும் என தோன்றியது.காங்கிரஸ் குறியிடப்பட்டது.
முற்றுகை போராட்டத்திற்கு வந்த பெண்கள் குறியீடாக வெள்ளை சேலை அணிந்து வந்தார்கள் (யாரும் அவர்களை அப்படி வர சொல்லவில்லை. அவர்களாக வந்தார்கள்) என்னவென்று கேட்டதற்கு, நாங்கள் தான் (பெண்கள் ) இந்த மீனவ படுகொலைகள் மூலம் பாதிப்பிற்கு உள்ளாகிறோம் , எங்கள் பெண்கள் தான் விதவையாகிரார்கள் அதை உணர்த்தவே வந்தோம் என்று பத்திரிக்கை கு சொன்ன்னார்கள். மேலும் கோவம் கொண்ட ஒரு பெண் சொன்னார் ” இந்திய ராணுவத்திற்கு எங்கள் சேலைகளை தருகிறோம் கட்டிக்கொள்ள சொல்லுங்கள் எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள் கடலையே வெற்றிகொள்ளும் நாங்கள் சிங்களனை எதிர்கொள்ளமாட்டோமா ? ” என்று. பெண் அடிமைத்தனம் பிற்போக்குத்தனம் என்று எல்லா இலக்கண பிழைகளையும் நீக்கி களப் போராட்டம் போர் குணத்தை செழுமை செய்கிறது. 60 பெண்களும் நான்கைந்து ஆண்களுமாய் நின்ற அந்த போராட்டத்தை என்னவென்று குறிபிடுவீர்கள்.
வழக்கம் போல இந்து பத்திரிகை “மீனவர் படுகொலையை நேரடியாக செய்தியாக்காமல் – இலங்கை அரசு தீர விசாரிப்பதாக உறுதியளித்ததாக – செய்தி வெளியிட்டது.http://www.thehindu.com/todays-paper/article1091503.ece இந்து பத்திரகையை தொடர்ந்து எதிர் கொள்ளவேண்டியதன் அவசியம் நமக்கு அடிக்கடி உணர்த்தப்படுகிறது. யாரவது இந்து பத்திரிக்கை அலுவலகத்தின் பெயரை ” இலங்கை துணை தூதரகம் ” என்று மே பதினேழு இயக்கம் தம் சொந்த செலவில் மாற்றி தர முயற்சி எடுக்க உள்ளது. தோழர்கள் எங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம். இதற்க்கான கோரிக்கை உங்களிடம் வைக்கப்படுகிறது. தாராளமாக நிதி தாருங்கள். எங்களிடம் தர இயலாவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிடம் அளிக்கலாம், பிரகாஷ் காரட் என். ராமின் நெருங்கிய நண்பர்.
போராட்டம் தொடர்ந்து நிகழ்த்த வேண்டிய அவசியத்தை நம் எதிரிகள் நமக்கு திரும்ப திரும்ப உணர்த்துகிறார்கள். இவர்களின் போரை எதிர்கொள்ள நம்மில் எத்தனை பேர் தயாராய் உள்ளார்கள் என்பதே நம் முன் உள்ள கேள்வி.
மேற்கூறிய கோரிக்கைகளை அனைவரிடத்தில எடுத்து செல்வோம். ஒரே குரலில் பேசுவோம். நாம் வெல்வோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்.
Sathyamoorthybavan protest against congress to condemn killing of TN fisherman Thirumurugan speech after protest against congress Aiyanathan speech after protest against congress -1 Aiyanathan speech after protest against congress -2 Artist santhaanam speech after protest against congress comrades arrested after protest against congress