இனப்படுகொலை மண்ணான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் நேற்று 07.11.13 வியாழகிழமை மாலை 4மணியளவில் மக்கள் விடுதலை இயக்கம்,இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்நிகழ்வில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தடா ஜெ.அப்துல்ரஹீம்,மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் கொண்டல்,மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பாக அதன் அமைப்பாளர் தோழர் பா.ரவி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகதின் தோழர் இளையராசா அகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்பாட்டத்தில் திரளான தமிழ் உணர்வாளர்களும்,பல்வேறு இயக்க மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.










