ஏழு தமிழர் விடுதலைக்கு ஒன்றுகூடல் – பதாகைகள்

- in பரப்புரை
தொடர்ச்சியாக 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை செய்யும் இந்திய அரசினையும், மூவரையும் தூக்கிலிடக் கோரும் நபர்கள், ஊடகங்கள், கட்சிகள் அதிகமாக குரலை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. மூவரையும் தூக்கிலிட்டுக் கொலை செய்யவேண்டுமென்கிற வெறியை ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை நாம்
தடுத்தாக வேண்டும்,
எதிர்த்தாக வேண்டும்,
வென்றாக வேண்டும்.

இந்தப் போரில் தமிழர்கள் நாம் என்றும் தோற்கக் கூடாது. ஒருமுறை நாம் வலுவற்றவர்கள் என்று எதிரிக்கு உணர்த்திவிட்டோமென்றால், பின் ஒருபொழுதும் உலகம் நம்மை மதியாது. நாம் மேன்மேலும் மிதிக்கப்படுவோம், ஒடுக்கப்படுவோம்.

பெரும் திரளாக திரண்டு நின்று அடுத்த நீதிமன்ற அமர்விற்கு முன்பாக தமிழர்களின் ஆதரவினை திரட்டி காட்ட வேண்டும். மனித குலத்திற்கு எதிரான கும்பலுடன் நமக்கு நடக்கும் போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

வரும் மார்ச் 2, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு அற்புதம் அம்மாள் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யவும் மற்றும் நமது ”தோழர்களின் விடுதலையை உடனே செய்” எனக் கோரி சென்னை மெரினாவில் ஒன்று கூடுவோம்.

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்.
தமிழகத்தின் உரிமையில் தலையிடாதே.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் விரோத சுப்ரமணிய சாமியை கைது செய்து விசாரி…..

கைகோர்ப்போம்.
அற்புதம் அம்மாளின் கண்ணீரை துடைப்போம்.
வெல்வோம் விடுதலையை.
தமிழரை தலை நிமிரச் செய்வோம்.
”இந்திய அரசின் துரோகத்தினை மறக்க மாட்டோம்” என்போம்.

துரோகங்களை வெல்ல, தலை நிமிர்வோம்.
மார்ச் 2இல் அச்சமின்றி கைகோர்ப்போம்

Leave a Reply