இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு நிரபராதி தமிழர்களையும் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு மாநில அரசுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி விடுதலை செய்தது. ஆனால் கூட்டாச்சி தத்துவத்தை கடைபிடிக்கும் இந்தியாவில் இந்த குறைந்தபட்ச உரிமையைக்கூட மறுக்கும் விதத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டு அவர்களின் விடுதலையை தடுத்து வருகிறது.
நிரபராதிகளான இந்த ஏழ்வரும் 23ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் இருந்து வருகின்றனர்.இந்த வழக்கில் தூக்கு தண்ட்னை விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் பேரறிவாளன் மூவரும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அளித்து 11ஆண்டுகள் அரசியல் காரணங்களால் அது கிடப்பில் போட்டப்பட்டது.இந்த இடைப்பட்ட காலங்களில் எந்த நாளிலும் மரண தண்டனை தங்களுக்கு வழங்கப்படலாம் என்ற மன உளைச்சலோடு கழிந்த போது இராஜிவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஜ அதிகாரி திரு.தியாகராஜன் தாம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமுலத்தில் திருத்தம் செய்தேன் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.இவர்களுக்கு கொடுத்த தண்டனை என்பதே இந்த ஒப்புதல் வாக்குமுலத்தின் அடிப்படையில் எனும்போது அதுவே தவறானது என்பது இப்போது தெளிவாகிவிட்டதால் இவர்களை விடுதலை செய்வது தான் சரியான வழிமுறையாகும்.அதைதான் தமிழக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அமைச்சரவை கூட்டத்தை கூட்டி சட்டமன்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இவர்களை விடுதலை செய்தது.
அதாவது உச்சநீதிமன்றமே இவர்களின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு இல்லாமல் இவர்களின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பைதான் மத்திய அரசு தற்போது மறுத்து வருகிறது.ஈழத்தில் ஒன்றறை லட்சம் மக்களை இனப்படுகொலை செய்த இராசபக்சே கூட்டத்துக்கு அனைத்து உதவிகளையும் தமிழக தமிழர்களின் எதிர்ப்பினை மீறி செய்த மத்திய அரசு இப்பொழுது இந்த நிரபராதி தமிழர்களையும் கொல்ல துடிப்பது மத்திய அரசின் தமிழர் விரோத போக்கையே காட்டுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து இந்த ஏழ்வரையும் விடுவிக்க வேண்டியது அவசியமாகிறது.எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 02 ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கி சென்னை மெரினாவில் மாபெரும் மக்கள் ஒன்று கூடலை நடத்த மே பதினேழு இயக்கம் நடத்துகிறது, இதில் தமிழ்நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகளான அனைத்து இயக்கங்களை சேர்ந்தவர்களும் பங்கு கொள்கின்றனர்.
கோரிக்கைகள்:
• ஏழு நிரபராதித் தமிழரைகளையும் உடனடியாக விடுதலை செய்.
• மத்திய அரசே தமிழகத்தின் உரிமையை பறிக்காதே
• இராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் விரோத சுப்ரமணிய சாமியை கைது செய்து விசாரி.
Indian Express:
Outfit Fumes at Centre over Rajiv Convicts
Posted on March 2, 2014 in Tamil Nadu
Express News Service
May 17 Movement co-ordinator Thirumurugan Gandhi on Saturday flayed the Centre for stalling the release of seven convicts in the Rajiv Gandhi assassination case.
May 17 Movement co-ordinator Thirumurugan Gandhi on Saturday flayed the Centre for stalling the release of seven convicts in the Rajiv Gandhi assassination case. He appealed to the people to participate in the gathering at the Marina near Kannagi Statue on Sunday evening to register their protest against ‘the betrayal of Tamil sentiments and inhuman attitude’ of the Central government.
“The State had decided to free all seven – Arivu alias Perarivalan, Santhan, Murugan, Nalini, Ravichandran, Robert Payas, and Jeyakumar – after the Supreme Court commuted the death sentence of the trio (Perarivalan, Santhan and Murugan). However, Centre had not only opposed the move but also moved the SC to obtain a stay, barring the release of those who had done time of over two decades”, he noted. “Centre is infringing upon the powers conferred on the State accorded in our Constitution,” he said.
Thirumurugan insisted that the Centre should clear the decks for immediate release of the seven. Levelling further accusations, he noted that the attitude of the Centre in this case to prolong the release of the prisoners vouches for their inhumane approach. “In fact, the Centre’s effort to release the prisoners may earn respect to the country in its part to promote humanitarianism and its march towards abolition of death penalty”, he said.
He impressed upon the Centre that Subramanian Swamy, who had recently joined BJP, be brought to book since he was one among the suspects in the killing of the former Prime Minister Rajiv Gandhi.
http://m.newindianexpress.com/tamil-nadu/272673
மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரள்
வைகோ அறிக்கை
1991 மே 21-இல் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளியளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 16 ஆண்டுக்காலம் மரணக் கொட்டடியில் தூக்குமரத்தின் நிழலில் விவரிக்க இயலாத மனத்துன்பத்தால் வாடினர். மொத்தத்தில் 23 ஆண்டுகள் வெஞ்சிறையில் அவதியுற்றனர். 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயÞ, ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடி வதங்கினர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-ஆவது பிரிவின்கீழ் ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுவிக்கவும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து அதைத் தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அறிவித்தார்.
தமிழ் இனத்துக்கும், தமிழகத்துக்கும், ஈழத் தமிழர்களுக்கும் கேடும், வஞ்சகமும், துரோகமும் செய்து வரும் மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரÞ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
2011-ஆம் ஆண்டு ஆகÞடு 30-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன் அவர்கள் மற்றும் சத்திய நாராயணா அவர்கள் அமர்வு முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனையை செப்டம்பர் 9-இல் நிறைவேற்றக் கூடாது என்று தடை விதித்து தீர்ப்பு அளித்தது மிக முக்கியமான திருப்பம் ஆகும்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்றும், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரÞ கட்சியின் ஆதிக்கத் தலைமையின் ஏற்பாட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
23 ஆண்டுகள் சிறைச்சாலையில் துன்புற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வது மனிதாபிமான நடவடிக்கை ஆகும். ஆனால், அத்தகைய மனிதநேய எண்ணமின்றி தமிழ்க்குல மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய காங்கிரÞ அரசின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும் ஏழு தமிழர்களையும் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மார்ச் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மக்கள் பெருந்திரள் ஒன்றுகூடல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்றது.
அந்த நிகழ்ச்சியில் மனிதஉரிமை ஆர்வலர்களும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும், மாணவச் செல்வங்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
01.03.2014 மறுமலர்ச்சி தி.மு.க.,