







நிமிர் பதிப்பகம் சார்பாக, ‘மலைகள் நம்மிடம் திரும்பிவிடும்’ – ஃபிதெல் காஸ்த்ரோ உடனான நேர்காணல் புத்தகத்தின் திருத்தப்பட்ட மறுபதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்புத்தகம், சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலய்டா குவேரா அவர்களால் இன்று (18-01-2023 புதன்) மாலை அறிமுகப்படுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நூலை தமிழில் மொழிபெயர்த்த தோழர் அமரந்த்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
புத்தக தேவைக்கு 8939782116