அய்யா வே ஆனைமுத்து அவர்களின் ‘இந்திய அரசமைப்புச் சட்டம் ஓரு மோசடி’ என்ற நூல் நிமிர் பதிப்பகம் சார்பாக மறுபதிப்பு செய்யப்பட்டு இன்று (17-01-23) மாலை சென்னை புத்தகக் காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365) வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் ஜவாஹிருல்லா மற்றும் தோழர் அப்துல் சமது, பூவுலகின் நண்பர்கள் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் இந்த புத்தகத்தினை வெளியிட்டனர்.
புத்தக தேவைக்கு: 8939782116