சென்னையில் நடைபெற்ற – ‘ஜல்லிக்கட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு’

ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்ய முயற்சிக்கும் பாஜக சதியினை முறியடிக்க, ‘ஜல்லிக்கட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு’ மே பதினேழு இயக்கம் சார்பாக ஜனவரி 7, 2023 சனிக்கிழமை மாலையில் தாம்பரம் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.பறையிசை முழங்க, மே பதினேழு இயக்கத் தோழர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்வை துவங்கினர்.தோழர் கொண்டல் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். தோழர் பரந்தாமன் துவக்க உரை நிகழ்த்தினார்.நிகழ்வில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தாம்பரம் முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவஹருல்லா, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு பசும்பொன் பாண்டியன்.மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொருளாளர் திரு ஹாருண் ரஷீத், இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு முகமது முனீர், எஸ்டிபிஐ கட்சியின் திரு ஏ.கே.கரீம், விசிகவின் மாவட்டத் தலைவர் திரு தேவ அருள் பிரகாசம், மதிமுகவின் வழக்கறிஞர் திரு ஆவடி அந்தரிதாஸ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு குடந்தை அரசன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு கே.எம்.சரீப், மக்கள் கண்காணிப்பக்கத்தின் தோழர் திரு ஹென்றி திபேன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply