
“தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை வாசிக்க ஆ-டு தவறுமானால் காவலர்களை வைத்து வெளியேற்ற வேண்டும். தமிழர்களின் சனநாயக அரசை அங்கீகரிக்க விருப்பமில்லாதவர் எம்நாட்டை விட்டு வெளியேறலாம். அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயரை உச்சரிக்க விரும்பாத ஆ-டு வேறெங்காவது சென்று வாலட்டட்டும்.
தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களை அவமதிக்கும் எவரும் அதிகாரத்தில் இருக்க தகுதியற்றவர். சட்டசபை உறுப்பினர்களும், திமுக அரசும் இந்த சங்கி மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். இந்த ‘ஆடு’ வெளியேற்றப்பட, ‘ஆடு’ பதவி ஒழிக்கப்பட அனைத்து கட்சி, இயக்க போராட்டத்திற்கு நாம் அணியமாக வேண்டும்.”
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்