









தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளையொட்டி, இன்று 24-12-2022) காலை, சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியாருடைய உருவ சிலைக்கு மே பதினேழு இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியாரின் கருத்துக்களை முழக்கமிட்டவாறு அணியாக சென்று மரியாதை செலுத்தினர். இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் புருசோத்தமன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010