வழக்கறிஞர்களின் முன்னோடி பாரிஸ்டர் அம்பேத்கர்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
“வழக்கறிஞராக பணி செய்வதில் எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அது உயர்சாதி சமூகத்திற்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் சமூகப் பணிகளைச் செய்வதற்காக சட்டப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறினார் அண்ணல்.
“அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப் பணியைத் தொடங்கினார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள மஹத் எனும் இடத்தில், உயர் சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வந்த சாவதர் குளத்தில் அனைத்து மக்களும் நீர் எடுப்பதற்காக நடந்தது இந்தப் போராட்டம். அந்தக் குளம் சட்டப்பூர்வமாக அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றும், “அது தனிப்பட்ட சொத்து அல்ல, மஹத் நகராட்சியின் சொத்து” என்றும் அவர் வெற்றிகரமாக நிறுவினார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010