ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-12-2022 திங்கள் கிழமை மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து தன்னுயிர் நீத்த ஐயா தாழையூர் தங்கவேல் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் திரு ஆர்.எஸ். பாரதி, மதிமுகவின் திரு வந்தியத்தேவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் புழல் சேக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் உமர் பாரூக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் முஹம்மது முனீர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், தமிழக மக்கள் முன்னணியின் பாவேந்தன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010