தி காஷ்மீர் பைல்ஸ்: பாசிச திரைப்படம் – அம்பலப்படுத்திய இசுரேலிய இயக்குநர்
– மே 17 இயக்கக் குரல் இணையதளக் கட்டுரை
“’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு மோசமான மத வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சார திரைப்படம். இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது மிகவும் அதிர்ச்சிக்கும், கலக்கத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது” என்று அவ்விழாவின் நடுவரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. மோடி இந்தப் படத்திற்காகத் தான் ஒரு விளம்பரத் தூதராகவே மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை நாட்டைச் சார்ந்தவரான நாடாவ் லபிட் , பாலஸ்தீனத்திற்கு எதிராக செயல்படும் இஸ்ரேலையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். “இஸ்ரேலிய கூட்டு ஆத்மா ஒரு நோய்வாய்ப்பட்ட ஆத்மா. எந்த கேள்வியும் எழுப்பாத, எந்த சந்தேகமும் இல்லாத இஸ்ரேலிய இளைஞர்களால் அதன் ஆழமான சாராம்சங்கள் அழுகி விட்டது..” – என்று தனது நாட்டையே கடுமையாக சாடியவர்.
நாடாவ் லபிட், “எனது கருத்துக்கள் நடுவர்களாகப் பங்கேற்ற அனைத்து திரைப்பட குழு உறுப்பினர்களாலும் கூறப்பட்டவையே. திரையிடல் அறையில் அமர்ந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு மோசமான மத வெறுப்புணர்வு விதைக்கும் படமே என்கிற உணர்வுகளே இருந்தன. விழாக்குழு உறுப்பினர்கள் அழுத்தம், பயம் அல்லது பதட்டத்தின் காரணமாகவே நான் கூறியதை தனிப்பட்ட என் ஒருவருடைய கருத்தாக சொல்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.” என ஊடகத்தில் பேட்டியளித்தார். மற்ற உறுப்பினர்களும் இதே கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள் என்பதை நிரூபிக்க என்னிடம் மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளது எனவும் அழுத்தமாகக் கூறினார்.
மேலும் வாசிக்க