இரட்டைக்குவளையையும், முடித்திருத்தம் செய்யக்கூடாது என்றும், மளிகையில் பொருள் தரகூடாது என்றும் சாதிய அழுத்தம் கொடுக்கும் முதன்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை பாயவில்லை. இதே ஒரத்தநாடு தாலுகாவில் வரவிருந்த மீத்தேன் திட்டத்தை தடுக்க பிரச்சாரம் செய்த என் மீது இதே பாப்பாநாடு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பொய்குற்றச்சாட்டில் அடக்குமுறையை 2018ல் ஏவியது. ஆனால் சாதிய வன்மம் எனும் கொடுங்குற்றத்தை செய்தவர்களை கைகட்டி காத்துக்கொண்டிருக்கிறது.
தலித்துகள் மீது வீரத்தை காட்டுபவர்கள் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக நிற்கும் துணிவுகொண்டவர்களல்ல. சாதிக்கு எதிராக போராடும் ராஜேந்திரன் போன்ற எம் தோழர்களே மண்ணை காக்கும் போராட்டத்திலும் நிற்கிறார்கள். கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு சாதிக்கு எதிராகவும், மண்காக்கவும் (சாதியவன்மம் கக்குபவர்கள் நிலங்களுக்கும் சேர்த்தே) மே17 போராட்டம் தொடர்கிறது.
பொது எதிரியை அறியாமல் சாதியாக நம்மை பிரித்து தமிழர் ஒற்றுமையை சிதறடிப்பவர்களை தனிமைபடுத்துங்கள். இல்லையேல் எந்த உரிமையையும் நாம் காக்க இயலாது. தமிழ் மண்ணை காக்க, மீத்தேனுக்கு எதிராக பேசினால், காவல்துறை கைது செய்கிறது. ஆனால் தமிழரை பிரிக்கும் சாதிவெறி கொண்டவனை பாதுகாக்கிறது.
சாதியவாதிகளை வளர்ப்பதில் இதுபோன்ற அரச அமைப்புகள் முனைந்து பணியாற்றுவது தலைகுனிவானது. தலித் அல்லாதவர்களே சாதிக்கு எதிராக போராட முன்வரவேண்டும். சாதியின் அவமானகரமான செயல்களை மெளனத்தின் மூலமாக நீங்களே பாதுகாக்கிறீர்கள். உங்கள் மெளனம் வெட்ககரமானது.
அடக்குமுறை சுரண்டலை எதிர்க்க இணைந்து பணிசெய்ய தொடர்புகொள்ளுங்கள்
– மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு