தமிழீழத்தை கட்டியெழுப்பிய பிரபாகரன் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
எந்தவொரு பெரிய அச்சுறுத்தலைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலை போகாமல், மக்களின் உரிமைகளை அடகு வைக்காது உறுதியோடு போராடும் துணிவு மிக்க பிரபாகரனை தங்களின் அடையாளமாக ஏற்றார்கள் ஈழத் தமிழர்கள். இபப்படியாத்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரானார்.
புலிகள் முப்படைகள் மட்டுமல்லாது, தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல்துறை, குற்றப் புலனாய்வு பிரிவு போன்றவற்றையும் திறம்பட நடத்தி வந்தனர். அங்கு தமிழீழ வைப்பகம், சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது.
பிரபாகரன் சாதி ஒழிப்பிற்கு முன்னுரிமை அளித்தார். வரதட்சணையை தடைசெய்தார். மத சமத்துவத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழீழ காவல்துறை மூலம் அங்கு சட்ட ஒழுங்கை அமல்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக சென்று பெண்களின் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் உன்னத தலைவர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010