பாஜகவின் ‘காசியில் தமிழ் சங்கமம்’ எனும் நாடகம் – மே 17 இயக்கக் குரல் இணையதளக் கட்டுரை

பாஜகவின் ‘காசியில் தமிழ் சங்கமம்’ எனும் நாடகம்
– மே 17 இயக்கக் குரல் இணையதளக் கட்டுரை

பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அவர் இந்த நிகழ்வில் பேசினார். கடந்த 2021-ம் வருடமும் இதையே தான் பேசினார். இனி அடுத்த வருடமும் பேசினாலும் வியப்படைய வேண்டியதில்லை. ஆனால் இதில் என்ன வியப்பான செய்தி என்றால், ஏற்கெனவே அங்கு தமிழ் இருக்கை இருக்கிறது என்று கடந்த வருடமே, அந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு பெண்மணி தெரிவித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தமிழ்நாடு மொழி வளர்ச்சி நிதியை 2017-2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்து, ரூ.22 கோடி மட்டுமே ஒதுக்கியது மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு. அதே வேளையில் இந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தின் வளரச்சி நிதியாக ரூ.643 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். 8 கோடி மக்கள் பேசும் மொழிக்கு 22 கோடியும், 30 ஆயிரம் மக்கள் கூட பேசாத மொழிக்கு கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகம் ஒதுக்கியவர்கள் தான் இன்று தமிழை சங்கமிக்க வைக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக இயக்குநரே போடவில்லை. 150 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் ஒன்றிய அரசின் நிதியின் மூலம் வழங்கப்பட்டு வந்த தமிழாய்வுக்கான குடியரசுத் தலைவர் விருதினை 2016-லிருந்து எவருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால் சமஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற மொழியாய்வுக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply