சிறப்பாக நடைபெற்ற திசை புத்தக நிலையத்தின் திறப்பு விழா

- in இலக்கியம், திசை

திசை புத்தக நிலையத்தின் திறப்பு விழா மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் 17-11-2022 அன்றுகாலை நடைபெற்றது. மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள் கடையை திறந்து வைத்தார். திராவிடர் கழக்கத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அறிவுச்சுடரை ஏற்றி வைத்தார். விசிக தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சிந்தனையாளர்கள் சிலையை திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் முதல் நூலை வழங்க, தமுமுகவின் நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு கட்சிகளை அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும், அறிஞர்களும், கலைஞர்களும், திரையுலகினரும் பங்கேற்றனர். அதோடு ஊடகத்தினரும் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர். விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் ‘திசை’ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

#ThisaiBookStore

தொடர்புக்கு: 9884082823

இணையதளம்: https://www.thisaibookstore.com/

மின்னஞ்சல்: [email protected]

முகநூல் பக்கம்: https://fb.com/ThisaiBookStore

டிவிட்டர் பக்கம்: https://twitter.com/ThisaiBookStore

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/ThisaiBookStore

Leave a Reply