மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு:
‘தமிழனோட வரலாறை தெரிஞ்சிக்கனும்னா என்ன புத்தகம் படிக்கனும்’
‘.. எல்லா பிரச்சனையும் தீர்க்கரதுக்கு வழி யாராவது சொல்லி இருக்காங்களா?’
‘..அரசியலைப் பற்றி தெரிஞ்சிக்கனும், எப்படி தெரிஞ்சிக்கிறது தோழர்?’
‘நம்மை சுத்தி நடக்கரதை புரிஞ்சிக்கனும். யார்கிட்ட கேட்டா தெரிஞ்சிக்கலாம், அண்ணே’
‘..நீங்க எதைப்படிச்சி இதெல்லாம் தெரிஞ்சிக்கிறீங்க?..’
இப்படி எண்ணற்ற கேள்விகளை புது இளம் தோழர்களை சந்திக்கும் போதெல்லாம் எதிர்கொள்கிறோம். பெரியாராக, அம்பேத்கராக, மார்க்ஸாக நம்முடைன் உரையாடும் நூல்களே இக்கேள்விகளை திறக்கும் சாவியாக உள்ளது. இந்த புத்தகங்களையெல்லாம் ஒருசேர எங்கே பார்ப்பது எனும் கேள்விக்கான விடையை தோழர்கள் கண்டடைந்திருக்கிறார்கள். கடுமையான கூட்டு உழைப்பாலும், பங்களிப்பினாலும் புத்தகக்கடையை உருவாக்கி உள்ளார்கள். குழந்தைகள், இளம் தோழர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை கண்டடைய விரும்பும் நூல்களை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்கான நோக்கத்தை வெளிப்படுத்த ‘திசை’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அனைவரும் எளிமையாக வந்தடையும் வகையில் இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து கடையாக்கி உள்ளார்கள். இந்த புத்தக நிலையத்தை உங்கள் அனைவரின் ஆதரவோடு தொடர்ந்து வெற்றிகரமாக கொண்டு செல்ல விரும்புகிறார்கள். எம் தோழர்கள் சுட்டும் ‘திசை’யை நீங்களும் விரும்புவீர்கள்.
விரைவில் ‘திசை’யைக் காண்பீர்கள்.