தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மருது பாண்‌‌‌டியர்கள் ஆட்சி மக்களுக்கானதாக இருந்தது. மருது பாண்‌‌‌டியர்கள் மன்னர் பரம்பரையினரல்ல; எளிய மக்கள் பரம்பரையை சேர்ந்தவர்‌‌‌கள். மக்களின் நிலையை நேரடியாகக் கண்டுணர்ந்‌‌‌து மக்‌‌‌களுக்கான ஆட்சியை நடத்தியவர்‌‌‌கள். மக்களாட்சி முறையை ஆதரித்தவர்‌‌‌கள். அவர்கள் ஆட்சியில் நீர் மேலாண்மை, நெல் மேலாண்மை, சமுக மற்றும் சமய நல்லிணக்கம், நட்பு வளர்த்தல், நாடுகாத்தல் போன்றவை சிறந்து விளங்கியது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களை கட்டியும்‌‌‌ திருப்பணிகளையும் செய்தனர். வடநாட்டிலே சதி முறையால் விதவைப்பெண்களை தீயிலேற்றும் கொடுமை நிகழ்ந்த அதே காலகட்‌‌‌டத்தில் தான், தங்கள் ஆட்‌‌‌சியில் விதவை மறுமணங்களை நடைமுறைப்படுத்தினர் மருதிருவர்.

கி.பி.1801 மே 28-ந் தேதி மருது சகோதரர்களின் சிவகங்கை சீமை மீதான தாக்குதலை ஆங்கிலேயர் படை தொடங்கியது. இதனை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திண்டுக்கல் பாளையக்காரர் விருப்பாச்‌‌‌சி கோபாலர், மணப்பாறை லட்சுமி, மலபார் மன்னர் கேரளவர்மன், கர்நாடக மன்னர் கிருஷ்ணப்பர், திப்பு சுல்தானின் குதிரைப்படை வீரரான மராட்டியத்தின் தூந்தாஜிவாக் போன்ற கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டணியில் இணைந்தனர். மராட்டியத் தலைவர்களிடம் பேச பல தூதுக் குழுக்களை ஏற்படுத்தினர். கொங்குப்பகுதி போராட்ட சக்திகளைக் கண்டு பேசவும் நல்லுறவை நாட்டவும் தீரன் சின்னமலை முன்வந்தார்.

தீரன் சின்னமலை தலைமையிலான கூட்டணி, 1800 ஜூன் 3-ஆம் தேதி, லெஃப்டினன்ட் கர்னல் கே.க்ஸிஸ்டரின் 5-ஆம் கம்பெனி படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிடப்பட்டது. “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்” கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது. இந்த கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும். இது இந்தியாவின் வரலாற்றை மாற்றியிருக்கும்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply