






தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை குறித்த நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இந்த சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (21-10-2022 வெள்ளி) காலை நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிக்கை வெளிப்படுத்தாத காரண காரியங்களை கண்டறிய எடப்பாடி பழனிச்சாமி, கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், துப்பாக்கி சூட்டிற்கு பின்னால் பாஜக மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சதி வலைப்பின்னல் உள்ளது என்றும் அதனை அறிக்கை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டது.
விரிவான அறிக்கை:
மே பதினேழு இயக்கம்
9884864010